தேனி:ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் 55 வயதான முனியாண்டி கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு மனைவி, மகள் முருகேஸ்வரி மற்றும் பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற 2 மகள்களும் காளிதாஸ் என்ற மகனும் உள்ளனர்.
காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக காளிதாஸ் ஜி.உசிலம்பட்டிக்கு வந்திருந்தார்.
மது போதைக்கு அடிமையான முனியாண்டி மனைவியுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் முனியாண்டி மது குடித்துவிட்டு போதையில் மனைவி முருகேஸ்வரி, மகன் காளிதாஸ் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதனையடுத்து காளிதாசை கன்னத்தில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் முனியாண்டியை தாக்கி கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி, காளிதாஸ் இருவரும் கொலையை மறைக்க முடிவு செய்தனர்.