தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண்டிபட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - Kutka pan confiscated by police near Andippatti

தேனி: ஆண்டிபட்டி அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டிபட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்
ஆண்டிபட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்

By

Published : Apr 23, 2020, 6:39 PM IST

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே காவல் ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் காருக்குள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரில் வந்த துரைராஜ் என்ற நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், தேனி அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருள்கள் வாங்கச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, வெங்கடாசலபுரம் சென்ற காவல் துறையினர், அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருள்களைக் கைப்பற்றினர்.

மொத்தம் 39 மூட்டைகள் மற்றும் நான்கு அட்டைப்பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து புகையிலை வாங்கச் சென்ற துரைராஜ், குடோன் உரிமையாளர் நவரத்தினவேல், தொழிலாளர்கள் மணிகண்டன், ராஜகுரு ஆகிய நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆண்டிபட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

மேலும் நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், புகையிலைப் பொருட்களை ஏற்றிவந்த காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்குக்கு முன்பு 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு புகையிலை குட்கா பாக்கெட் தற்போது 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ABOUT THE AUTHOR

...view details