தேனி:சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தங்களது விடுமுறை தினத்தை கொண்டாட கும்பக்கரை அருவிக்கு அதிகளவில் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டுச்செல்வது வழக்கம். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த தொடர் கன மழை காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து கும்பக்கரை அருவிக்கு வரும் நீர் வரத்து அதிகமாகி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் அருவியில் குளிக்க பாதுகாப்பு சூழல் இல்லாத காரணத்தினால், கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி முதல் சுற்றுலாப்பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால் 15 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தனர்.