தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி சனி வாரத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, சாமிக்குப் பொங்கல் வைத்து கிடாய் வெட்டியும், மதுபானங்கள் படைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.
கோயில் கலயத்தில் ஊற்றினால் மதுவின் வாசம் மறையும் அபூர்வம்! - alcohol smell removed by kalayam
தேனி: குச்சனூரில் உள்ள ஒரு கோயிலின் கலயத்தில் மதுவை ஊற்றினால், அதன் வாசம் மறைந்துபோகும் அதிசயம் நடப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில்
குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில்
பின்னர், கோயில் கதவுகள் மூடப்பட்டு சுவாமி சிலைக்குக் கீழே உள்ள கலயத்தில் ஊற்றப்படும். இவ்வாறு ஊற்றப்படும் மதுபானங்கள் வாசம் தெரியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சாமிக்கு மதுபானங்கள் படைத்து வழிபடுவதால் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.