குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கேரளாவில் தலித், இஸ்லாமிய அமைப்புகளின் சம்யுக்த சமர - சமதி சார்பில் நேற்று முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆளும் இடதுசாரி அரசும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆதரவளித்தன. இதனால், மாநிலம் முழுவதும் தனியார் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.