தேனி: கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் மக்களை அப்புறப்படுத்தி வனப்பகுதியாக மாற்ற வேண்டும் என்ற கஸ்தூரிரங்கன் அறிக்கையை உச்ச நீதிமன்றம் தற்போது அமல்படுத்த கூறியுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 264 ஊர்களில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டம் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று (நவ. 28) ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால் தமிழ்நாடு எல்லையான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.