தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதாவின் மகள் என கூறும் ஜெயலட்சுமி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு! - ஜெயலட்சுமி ஜெயலட்சுமி

Jayalakshmi visit Andipatti: ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி வரும் ஜெயலட்சுமி, ஆண்டிபட்டியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

“என் அம்மாவின் கட்சி நாளாக உடஞ்சிருக்கு” - தேர்தல் பணியின் போது ஜெயலட்சுமி பேச்சு
“என் அம்மாவின் கட்சி நாளாக உடஞ்சிருக்கு” - தேர்தல் பணியின் போது ஜெயலட்சுமி பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 7:47 PM IST

“என் அம்மாவின் கட்சி நாளாக உடஞ்சிருக்கு” - தேர்தல் பணியின் போது ஜெயலட்சுமி பேச்சு

தேனி:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி வரும் ஜெயலட்சுமி என்ற பெண், இன்று (செப்.16) தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வந்தார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் அவரை, ஆள் உயர மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.‌ மேலும், பெண்கள் தங்கள் குழந்தைகளை அவரிடம் கொடுத்து செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து ஜெயலட்சுமி, ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “எனது அம்மா ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு வந்திருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வந்திருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “எனது அம்மாவின் கட்சி நான்காக உடைந்து இருப்பதால்தான் தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு செய்ய உள்ளேன்” என்றார். மேலும், மக்களுடைய ஆதரவு தனக்கு இருப்பதால், யாருடனும் கூட்டணி கிடையாது என்றும் தனித்துதான் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோடநாடு வழக்கு; கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details