தேனி மாவட்டம் போடி, சுப்புராஜ் நகரில் உள்ள மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட வருமானவரித் துறையிருக்குத் தகவல் கிடைத்தது.
ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமானவரித் துறை சோதனை - ஓபிஎஸ் அலுவலகம்
![ஓபிஎஸ் அலுவலகம் அருகே வருமானவரித் துறை சோதனை it-raid-in-near-ops-house-in-theni](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11260055-thumbnail-3x2-l.jpg)
09:21 April 03
தேனியில் உள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே உள்ள ஜெ. பேரவை பொருளாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதனடிப்படையில், வருமானவரித் துறை உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமையில் அவரது வீட்டிற்குச் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிஞ்சி மணி தேமுதிகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்.
இவரின் வீடு வீடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வருமானவரித் துறையினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திமுக எம்.பி., வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!