தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவதாக புகார்! - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: ஊராட்சி மன்றத் தலைவர்களின் பணிகளில் தலையீடு செய்து வருவதாக மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் மீது புகார் எழுந்துள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிப்பு
ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிப்பு

By

Published : Oct 13, 2020, 8:08 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உள்பட்ட கீழவடகரை ஊராட்சி மன்றத்தின் தலைவியாக இருப்பவர் செல்லராணி செல்வராஜ். இவர் தன்னை ஊராட்சிப் பணிகள் செய்ய விடாமல் தடுப்பதாக மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் மீது புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் (அக.11) பெரியகுளத்தில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஊராட்சிக்குழு துணைத் தலைவரை கண்டித்து அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் இன்று (அக்.13) அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அப்போது மாவட்ட அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ் (எ) ஆரோக்கியசாமி, செயலாளர் பாண்டியன் (எ) சின்னப்பாண்டியன், கீழவடகரை ஊராட்சி மன்றத் தலைவி செல்வராணி செல்வராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தலித் ஊராட்சி தலைவர் அவமதிப்பு - வெள்ளை அறிக்கை கேட்கும் திருமா

ABOUT THE AUTHOR

...view details