தேனி:முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதி மன்றம் கண்காணிப்புக் குழுவை அமைத்தனர். தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் உள்ளார்.
இந்த மூவர் குழுவினருக்கு உதவியாக துணை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இன்று(பிப்.01) துணைக்குழுவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணைக்குழுவினர் இன்று பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ள நிலையில், பெரியாறு அணையில் செய்யப்பட்டு வரும் வழக்கப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு அணைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.