தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்ட ஓபிஎஸ்!

தேனி: தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடத்தை துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (டிச.12) பார்வையிட்டார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

By

Published : Dec 12, 2020, 3:56 PM IST

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் ஐடி பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் தயார் செய்யப்பட உள்ளது. இதன் தொடக்கமாக இன்று (டிச.12) இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

தேனி அன்னஞ்சி விலக்கு அருகே உள்ள பெரியகுளம் புறவழிச்சாலையில் வனத்துறை, வருவாய்த்துறைக்குச் சொந்தமான சுமார் 96 ஏக்கர் பரப்பளவு இடத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கம்பம் எம்.எல்.ஏ.ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்ட ஓபிஎஸ்

இதனைத் தொடர்ந்து அரண்மனை புதூரா முல்லைப் பெரியாற்றின் பாலத்தில் தடுப்புச்சுவர் கட்டுமான பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார். பள்ளி மற்றும் உயர்கல்வியில் வளர்ச்சி அடைந்து வரும் தேனி மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான திட்டம் தயார் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டமின்றி பிற மாவட்டங்களில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் பயனடைவார்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ரயில்வே நிலையத்தில் பார்க்கிங்கை காலி செய்யக்கோரிய உத்தரவு ரத்து

ABOUT THE AUTHOR

...view details