தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் இன்று எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு வெள்ள அபாய மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், சிவகங்கை மாவட்டம் இலுப்பங்குடியில் உள்ள இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி பிரிவை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவு கமான்டர் பிரீத்தம்சிங் உத்தரவின் பேரில், உதவி கமான்டர் சஞ்சீத் சிங் தலைமையிலான 32பேர் கொண்ட குழுவினர் எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் 88பேருக்கு பயிற்சி அளித்தனர்.
இந்தோ – திபெத் படையினருக்கு முல்லைப் பெரியாற்றில் பேரிடர் கால சிறப்பு பயிற்சி. - இந்தோ திபெத் வீரர்களுக்கு பயிற்சி
தேனி: பேரிடர் மற்றும் வெள்ள அபாய காலங்களில் ஆற்று நீரை எவ்வாறு கடக்க வேண்டும் என இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தேனி மாhவட்ட வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
![இந்தோ – திபெத் படையினருக்கு முல்லைப் பெரியாற்றில் பேரிடர் கால சிறப்பு பயிற்சி. இந்தோ திபெத்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9329217-738-9329217-1603795448683.jpg)
இதில் பேரிடர் மற்றும் வெள்ள அபாய காலங்களில் ஆற்று நீரை எவ்வாறு கடக்க வேண்டும், பொதுமக்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சுமார் 120 அடி அகலம் கொண்ட முல்லைப் பெரியாற்றில் கயிறு கட்டி ஆற்றை கடப்பது, மரப்பலகைகள் உதவியோடு மீட்புப்பணியில் ஈடுபடுவது, லைஃப் ஜாக்கெட் எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு பொது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்தும் இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது முல்லைப் பெரியாற்றில் விநாடிக்கு 1600கன அடிநீர் வந்து கொண்டிருப்பதால் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களுக்கு உதவிடும் வகையில் தேனி தீயணைப்புத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.