தேனி: சின்னமனூர் பகுதியில் உள்ள சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் சீட்லெஸ் எனும் விதையில்லா பச்சை திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். வருடத்திற்கு இரண்டு முறை இந்த திராட்சை பழங்களை விளைவித்து விவசாயிகள் அறுவடை செய்து அண்டை மாநிலமான கேரளாவிற்கும், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பச்சை திராட்சையின் இரண்டாம் போக சாகுபடியில் அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடையின் தொடக்கத்திலேயே திராட்சை பழத்தின் விலை கிலோ ரூ.71 க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.