தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவான 71 அடியில் 70 அடி வரை தண்ணீர் எட்டியுள்ளதால் உபர் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - விவசாய பாசனத்திற்கு நீர் திறப்பு
வைகை அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகையில் நீர்திறப்பு அதிகரிப்பு...5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
அந்த வகையில் வினாடிக்கு 2,769 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தாய் தற்கொலை செய்து கொண்ட 2 வாரங்களில் மகனும் தற்கொலை