தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைக் காட்டு பகுதியில் அரிய வகை மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பிச்சாங்கரை காட்டுப் பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக வந்த தகவலின் பேரில் போடி வட்டாட்சியர் மணிமாறன் தலைமையிலான குழுவினர் இன்று நேரில் சென்றனர்.
தேனியில் மரக்கடத்தை தடுத்த வருவாய்துறையினர்! - குரங்கணி மலை
தேனி: குரங்கணி மலை பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டர்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
![தேனியில் மரக்கடத்தை தடுத்த வருவாய்துறையினர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3198483-thumbnail-3x2-wood.jpg)
பல லட்சம் மதிப்புள்ள அரிய வகை மரங்களையும், கடத்தலுக்கு பயன்பட இருந்த இரண்டு டிராக்டர்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில், போடி மேலத்தெருவை சேர்ந்த சருபுதீன் என்பவருக்கு சொந்தமான தோட்டங்களில் மராமத்து பணிகளுக்கு மரங்களை வெட்டுவது போல் வனப்பகுதியில் உள்ள பல அரிய வகை மரங்களை வெட்டி கடத்தி வருவது தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் போடி வட்டாட்சியர் அலுவலகம் எடுத்துவரப்பட்டு கடத்தல் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.