தேனி கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சேதுபதி (22). இவருக்கும் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் சிவசக்திக்கும் (18) கடந்த நவம்பர் 1ஆம் தேதி கம்பத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமணத் தம்பதி ராஜாவின் வீட்டு மாடியில் வசித்துவந்தனர்.
இந்நிலையில், நேற்று சேதுபதி வீட்டிலிருந்து வெளியே சென்றதாகத் தெரிகிறது. அப்போது சிவசக்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதில் வெகுநேரமாகியும் மாடியிலிருந்து சிவசக்தி கீழே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த சேதுபதியின் தாய் புஷ்பவள்ளி மாடியில் உள்ள அறையில் சென்று பார்த்துள்ளார்.
அப்போது சிவசக்தி வீட்டின் மேல் சுவரிலிருந்த கொக்கியில் சுடிதார் துப்பட்டாவை மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த புஷ்பவள்ளி அலறி சத்தமிட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து தூக்கில் தொங்கிய சிவசக்தியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.