தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா- மதுபாட்டில்கள் வைத்து வழிபாடு! - சனீஸ்வரன் கோயில் ஆடித் திருவிழா

Kuchanur Suyambu Saneeswaran Temple Aadi Festival: குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை காணிக்கையாக வைத்து பொதுமக்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள்.

Kuchanur Suyambu Saneeswaran Temple Aadi Festival near Theni Devotees Swamy darshan by keeping wine bottles
குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா

By

Published : Aug 15, 2023, 3:21 PM IST

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா

தேனி:குச்சனூரில் உள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் வருடம் தோறும் ஆடிப்பெரும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருட ஆடி பெரும் திருவிழா கடந்த ஆடி 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது.

பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் ஆடி மாத சனிக்கிழமை தினங்களில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் சுரபி நதியில் நீராடி எள் தீபம் ஏற்றியது உடன். உப்பு, பொரி உடன் சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் மண் காகத்தினை வைத்து தோஷங்களை நிவர்த்தி செய்து வந்தனர்.

இதையும் படிங்க: நாடு செழிக்கும்... நாட்டு மக்கள் சந்தோஷமா இருக்கனும்.... அரிவாளில் நின்று அருள்வாக்கு கூறிய கருப்பசாமி!

இந்த வருட ஆடி மாத பெருந் திருவிழாவின் நிறைவு நாளில் சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சோனை கருப்பசாமி நீண்ட கால வேண்டுதல்களை நிறைவேற்றியதற்காக மதுவினை வைத்து இறை வழிபாடு செய்கின்றோம் என வேண்டியும், நீண்ட கால ஆசையை கருப்பசாமி நிறைவேற்றியதற்காக காணிக்கை வைப்பதாகவும் ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை பொதுமக்கள் காணிக்கையாக வைத்து இறைவழிபாடுகளை செய்தனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டு வந்த ஆயிரத்து 750 மது பாட்டில்களை இந்து சமய அறநிலையத் துறையினர் அவர்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டு சேகரித்து கருப்பசாமி திருஉருவச் சிலையின் உச்சிக்கால பூஜைக்கு வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள் மது அபிஷேக, விசேஷ பூஜைகளை நடத்தினார்கள்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு 26 சேவல்கள் மற்றும் ஆட்டுக்கறியுடன் சமைக்கப்பட்ட அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ததுடன், அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: களைகட்டிய 'ஆவிளிபட்டி மீன்பிடி திருவிழா'.. 10 கிலோ எடையிலான மீன்களை பிடித்து மக்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details