தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா கடத்திய பெண் உள்பட 5 பேர் கைது! - கம்பம் கஞ்சா பறிமுதல்

தேனி: கம்பம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

theni cumbum including woman four men arrested for illicit trading cannabis
theni cumbum including woman four men arrested for illicit trading cannabis

By

Published : Jun 17, 2020, 4:57 AM IST

தேனி மாவட்டம் கம்பம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்றுவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இந்நிலையில், காட்டுப்பள்ளிவாசல் அருகே புதிதாக போடப்பட்டுவரும் புறவழிச்சாலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.

சோதனையில், காரில் 23 கிலோ கஞ்சா இருப்பதைக் காவல் துறையினர் கண்டறிந்தனர். காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த சிவனேசன் (எ) சிவனேஸ்வரன் (28), பேச்சியம்மாள் (40), அமைதிக்கண்ணன் (26), கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்த விஜய் (21), உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த அமரேசன் (42) என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கம்பம் வடக்கு காவல் துறையினர் ஐந்து பேரையும் கைதுசெய்து சிறையிலடைத்தனர். மேலும் தப்பியோடிய அய்யனார், பாண்டீஸ்வரன் ஆகிய இருவரையும் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:1000 லிட்டர் கடத்தல் சாராயம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details