தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த 2000 மதுபாட்டில்கள் பறிமுதல் - illegal wine bottles-seized

தேனி:  ஆட்டோவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த இரண்டாயிரம் மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

illegal-wine-bottles-seized

By

Published : Nov 9, 2019, 7:27 AM IST

தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து ரத்தினம் நகர் அருகே உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட ஆட்டோவில் வைத்து மதுபாட்டில்களை இருவர் கடத்தியது தெரிய வந்தது.

மதுபாட்டில்கள் பறிமுதல்

இதனையடுத்து ஆட்டோவில் இருந்த 2000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட போடியைச் சேர்ந்த அரவிந்தன், தேனி சிவராம் நகர் பகுதியைச் சேர்ந்த அறிவானந்தன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.


இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்புக்கு முன்னதாக மக்களுக்கு மோடி விடுத்துள்ள வேண்டுகோள்..
!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details