தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்காக தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது: ஓபிஎஸ் சகோதரர் ராஜா! - தேனி மாவட்ட ஆட்சியர்

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்காக தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் சகோதரர் ராஜா தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்காக தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது- ஓபிஎஸ் சகோதரர் ராஜா!
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்காக தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது- ஓபிஎஸ் சகோதரர் ராஜா!

By

Published : Jun 7, 2022, 10:59 PM IST

தேனி: லட்சுமிபுரம் அருகே ஓபிஎஸ் சகோதரர் ராஜா பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியின் வளாகத்திற்காக வடவீரநாயக்கன்பட்டி என்ற இடத்தில் உள்ள அரசு நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண்ணை எடுத்து அவர் தன்னுடைய பள்ளிக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்காக தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் தன் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்றும், தனது பள்ளி வளாகத்திற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து எவ்வித கிராவல் மண்ணும் எடுக்கவில்லை என்றும் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தம் மீது சுமத்தப்பட்டு வருவதாகவும் ஓபிஎஸ் சகோதரர் ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'திமுக மலை; பாஜக மடு...' - வைகோ சடுகுடு!

ABOUT THE AUTHOR

...view details