தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி திட்டியதால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை! - husband and wife fight husband suicide

தேனி: வேலைக்குச் செல்லாமல் கணவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

theni

By

Published : Nov 7, 2019, 9:29 PM IST

தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசித்துவந்தவர் பாண்டியராஜன்(42). இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிழைப்பிற்காக பாண்டியராஜன் டிராக்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார்.

பாண்டியராஜன் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறுது. இதனால் பாண்டியராஜனுக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாண்டியராஜனின் தாயார் ஒரு லட்ச ரூபாய் பணத்தைக்கொண்டு அவரிடம் கொடுத்து, கடனை அடைத்துவிட்டு குடும்பத்தை நிம்மதியாக கவனி என்றும், வேலைக்கு ஒழுங்காக செல்லுமாறும் கண்டித்துவிட்டு சென்றுள்ளார்.

தாயார் சென்ற அடுத்த சில நிமிடங்களில் மதுக்கடைக்குச் சென்ற பாண்டியராஜன், மதுபாட்டில்கள் ஏராளமாக வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனைக் கண்ட பாண்டியராஜனின் மனைவி பாக்கியலட்சுமி ஆத்திரமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்ட பாண்டியராஜன்

இதில் மனமுடைந்த பாண்டியராஜன் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் உள்ளே சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் போடி நகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ’அயன்’ பட பாணியில் நடைபெற்ற கடத்தல் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details