தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா தேவாரம் அருகேயுள்ள டி.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன் - முனியம்மாள் தம்பதி. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் விவசாயக் கூலித் தொழில் செய்து வருகின்றனர். முனியம்மாள் வேலைக்காக கேரளாவில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்று வருவது வழக்கம்.
இதனால், முனியம்மாளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சந்திரன், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, அவரை கேரளாவிற்கு வேலைக்குச் செல்லக்கூடாது எனக் கூறியதாக தெரிகிறது. இன்று (பிப்.18) காலை வழக்கம் போல வேலைக்காக முனியம்மாள் ஜீப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்தது சென்று வழிமறித்த சந்திரன் தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.