தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் கணவர் கைது

17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நடவடிக்கை மருத்துவரின் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் கணவர் கைது
17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் கணவர் கைது

By

Published : Aug 25, 2022, 3:13 PM IST

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு அதே பகுதியைச்சேர்ந்த அவரது உறவினர் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்தப்பெண் பிரசவத்திற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் பிரசவத்திற்காக பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும்போது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது தற்பொழுது நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில் அந்த இளைஞர் தன் மனைவி பிரசவத்தின்போது கொடுத்த ஆதார் குறிப்பில் அவருக்கு 17 வயது கூட பூர்த்தி அடையாத நிலையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் 16 வயதில் சிறுமிக்குத் திருமணமாகி 17 வயதில் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் சிறுமியைத்திருமணம் முடித்த கணவரை, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு குழந்தைத் திருமணத்தைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதற்கு இதுவே உதாரணம்.

இதையும் படிங்க: கார் மோதி விபத்து...சிறுவன் பலி

ABOUT THE AUTHOR

...view details