தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப வறுமை காரணமாக கணவர், மனைவி தற்கொலை - theni family poverty problem

தேனி: குடும்ப வறுமை காரணமாக கணவர், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

husband
husband

By

Published : Jul 2, 2020, 9:34 PM IST

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள காமன்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா (55), போதுமணி (48). இவர்களுக்கு ஜெயப்பிரபு, ஜெயசீலா ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதில், ஜெயசீலாவிற்கு திருமணமாகி கணவர் இறந்ததால் தனது தாய் வீட்டில் வசித்துவருகிறார். விவசாயம் செய்துவந்த ராஜாவிற்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் நடக்கமுடியாத நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், போதுமணியும் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

குடும்ப வறுமையின் காரணமாக அல்லல்பட்டு வந்த இந்தத் தம்பதியினர், இன்று தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். இவர்களின் தோட்டத்தில் உள்ள மரத்தில் வேட்டியில் தூக்குமாட்டி ராஜாவும், தென்னை மர பூச்சி மாத்திரையை தின்று போதுமணியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக மயிலாடும்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப சூழலால் கணவன் - மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:’பணத்தை வாங்கிட்டு எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க’ - தற்கொலை செய்து கொண்ட பெண் காவலரின் வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details