தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்டை துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் கைது! - துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் கைது

தேனி: ராயப்பன்பட்டி அருகே காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Three arrested for keeping illegal gun
Three arrested for keeping illegal gun

By

Published : Oct 6, 2020, 4:27 PM IST

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி பகுதியில் காவல்துறையினர் வழக்கம்போல் இன்று (அக்-6) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சண்முகநாதன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து சோதனை நடத்தியதில், அவர்களிடம் ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவர்கள் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த சோனை (56), அனைப்பட்டியை சேர்ந்த சரத்குமார் (28), இந்திரகுமார் (24) என்பதும், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக மூன்று பேர் மீது ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், வனவிலங்குகள் ஏதும் வேட்டையாடப்பட்டனவா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: உபி.யில் 17 வயது பட்டியலின சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details