தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் கனமழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2அடி உயர்வு - சண்முகா நதி

தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2அடி உயர்ந்து 125அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Mullaiperiyaru dam
Mullaiperiyaru dam

By

Published : Nov 18, 2020, 1:58 PM IST

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முழுவதும் பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு, வைகை, சண்முகா நதி உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேக்கடியில் 56.6மி.மீ, பெரியாறு அணையில் 44.6மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று (நவம்பர் 18) ஒரே நாளில் 2அடி உயர்ந்து தற்போது 125.20அடியை எட்டியுள்ளது. மேலும் அணையின் நீர்வரத்தும் விநாடிக்கு 6,089கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 3,661மி.கன அடியாகவும், 1,267கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது..

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

இதே போல மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணையின் நீர் மட்டமும் இன்று ஒரே நாளில் 8அடி வரை உயர்ந்துள்ளது.

அணையின் மொத்த நீர் மட்ட உயரமான 52.50அடியில் நேற்று காலை நிலவரப்படி 37.00 அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று (நவம்பர் 18) காலை 45.90அடியை எட்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 59.22மி.கன அடியாகவும், நீர்வரத்து 252அடியாக இருக்கின்றது. நீர் வெளியேற்றம் ஏதும் இல்லை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சண்முகா நீர் தேக்கம் மேலும் உயரக்கூடும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details