தேனி: பாஜக சார்பில் மத்திய அரசின் 8ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, வாழ்க்கையில் நேர்மை இல்லாதவர்கள் திமுகவினர் என்றும், கச்சத்தீவை பாஜக அரசு மீட்டு விடும் என தெரிந்து அதனை மீட்க குரல் கொடுப்பது போல நடிக்கிறார்கள் என்றும், பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தால் அதற்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும், அதனை விட்டுவிட்டு அதற்கு உரிமை கொண்டாட கூடாது என்று கூறினார்.