தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தேனி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இதன் காரணமாக தேர்தல் ஆணையம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவுக்கு என 32 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினை கண்காணிப்பதற்காக அவர்களின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பல்லவி பல்தேவ் முன்னிலையில் 12 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.