தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, செங்குளத்துப்ட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்தனர். கடந்த மாத தொடக்கத்தில் இருந்து அறுவடை பணிகள் நடைபெற்ற நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர்.
மேல்மங்கலம், ஜெயமங்கலம், செங்குளத்துப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மதுரையில் உள்ள நெல் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.