தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போடி, ஆண்டிபட்டி, வீரபாண்டி, உப்பார்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டக்குடி, முல்லை மற்றும் வைகை ஆற்றின் தண்ணீர் பாய்கின்ற பகுதிகளில் நெல்லிக்காய் சாகுபடி அமோகமாகவுள்ளது.
தேனியில் நெல்லிக்காய் சாகுபடி அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி: நெல்லிக்காய் சாகுபடி அமோகமாக நடைபெறுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் தேனி, மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் நெல்லிக்கனியைக் கொள்முதல் செய்ய தேனி சந்தைகளில் குவிகின்றனர்.
இது குறித்து, உப்பார்பட்டி விவசாயிகள் கூறும்போது, வேப்பம் புண்ணாக்கு, ஆடு, மாடுகளின் சாணம் என இயற்கை சார்ந்த வேளாண் இடுபொருட்களையே உரமாக பயன்படுத்துகின்றோம். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நெல்லிக்காய் சாகுபடி நடைபெற்றாலும், மண்வளம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பாய்கின்ற தண்ணீரால் தேனி மாவட்டப் பகுதிகளில் விளைகின்ற நெல்லிக்காய்களுக்கு இயற்கையாகவே சுவை அதிகமாகவுள்ளது. இதனால் கேரள சந்தையில் தேனி மாவட்ட நெல்லிக்காய்களுக்கு தனி கிராக்கி உள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூபாய் 25 வரை கொள்முதல் செய்யப்படட்து. இந்த ஆண்டு கிலோ 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.