தமிழ்நாடு

tamil nadu

தேனி அரசு அலுவலரை சரமாரியாக வெட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

By

Published : Jun 23, 2022, 1:34 PM IST

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ ராஜேஸ்வரி வெட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உமாசங்கர் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க மாவடட் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேனி அரசு அலுவலரை சரமாரியாக வெட்டியவர் மீது ’குண்டாஸ்’ சட்டம்
தேனி அரசு அலுவலரை சரமாரியாக வெட்டியவர் மீது ’குண்டாஸ்’ சட்டம்

தேனி: மாவட்ட பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ ராஜேஸ்வரியை அவரது அலுவலகத்தில் புகுந்து உமாசங்கர் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பின்னர் ராஜ ராஜேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2013-19ஆம் ஆண்டு காலகட்டத்தில் தேனி மாவட்ட ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவராக ராஜ ராஜேஸ்வரி பணிபுரிந்த போது உமாசங்கர் அவரிடம் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது உமாசங்கர் சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் ராஜ ராஜேஸ்வரி மீது தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் மீது அல்லிநகரம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் உமாசங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மகனை வெட்டிக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை; பெரியகுளம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details