தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி காளியம்மன் கோயிலில் 10 சவரன் தங்க நகை, ஐம்பொன் சிலை திருட்டு! - tamilnadu latest news

தேனி: காளியம்மன் கோயிலில், 10 சவரன் தங்க நகை, 5 கிலோ எடையுடைய ஐம்பொன் சிலை உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

காளியம்மன் கோயிலில் திருட்டு
காளியம்மன் கோயிலில் திருட்டு

By

Published : Feb 6, 2021, 5:04 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெருமாள்புரம் பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு (பிப்.5) வழக்கம் போல கோயிலில் பூஜைகளை முடித்த பூசாரி ராமசாமி, கோயில் நடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். வழக்கம்போல இன்று (பிப்.6) காலை மீண்டும் அவர் கோயிலைத் திறக்க வந்தார்.

அப்போது கோயில் நடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மனின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகை, 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை, 2 வருடங்களாக எண்ணப்படாத காணிக்கைஉண்டியல் உள்ளிட்டவை திருடுபோய் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் முக்கிய ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கோயில் உண்டியல் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details