தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இறைவனின் கொடை ஓபிஎஸ்' - முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் - ]cm palaniswami campign at theni

தேனி: ”தேனி மாவட்டத்திற்கு இறைவன் தந்த கொடை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்” என முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையின்போது பெருமிதத்துடன் தெரிவித்தார்.

துணை முதலமைச்சரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை
துணை முதலமைச்சரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை

By

Published : Mar 28, 2021, 7:49 AM IST

Updated : Mar 28, 2021, 12:40 PM IST

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியின் குக்கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகளைக் கூட அறிந்தவர். தமிழ்நாட்டிலேயே அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

துணை முதலமைச்சரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை

மக்களைக் குழப்பி தேர்தலில் வென்று விடலாம் என்ற திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. மக்களை ஏமாற்றுவதுதான் அக்கட்சியினரின் வேலை. ஏமாந்ததெல்லாம் போதும். இனியும் ஏமாற வேண்டாம். அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர்களை தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, நாட்டு மக்களுக்கு நன்மை செய்யாத கட்சி திமுக. நன்றி மறந்த தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இம்மாவட்டதிற்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை ஓ.பன்னீர்செல்வம்" என்றார்.

Last Updated : Mar 28, 2021, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details