தேனி:தேனி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.. நேற்று(ஜூலை 6) நிலவரப்படி நீர் திறப்பு ஆயிரத்து 678 கனஅடியாக இருந்தது.
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கு செல்லும் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும், எனவே கூடலூர், உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.