தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2022, 4:18 PM IST

ETV Bharat / state

CCTV: கேரளாவில் டேங்கர் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; 14 பேர் காயம்

கேரளாவில் பேருந்தும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய 14 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கேரளா மாநிலம், கட்டப்பனையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் பேருந்து மூலமாக சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று (நவ.6) தொடுபுழா பகுதி நோக்கி இவர்கள் சென்ற பேருந்து சாலையின் வளைவில் வந்த டேங்கர் லாரி ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதனால், பேருந்தில் இருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக, அந்தப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காட்சிகள் தனியார் பேருந்தில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கேரளாவில் டேங்கர் லாரியும் பேருந்தும் மோதிய சிசிடிவி வீடியோ

இதையும் படிங்க:துண்டாகிய சேரன் விரைவு ரயில் இணைப்பு - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட விபத்து

ABOUT THE AUTHOR

...view details