ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாடகை வீட்டில் விபச்சாரம்; தேனியில் 4 பேர் கைது! - 4 பேரை கைது செய்த போலீசார்

தேனி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டார்கள் புகைப்படம்
கைது செய்யப்பட்டார்கள் புகைப்படம்
author img

By

Published : Feb 13, 2023, 1:35 PM IST

தேனி:பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமி புரத்தில், தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் சேதுமூர்த்தி, ராமமூர்த்தி, விஷ்ணு ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். இந்த வீட்டுக்கு அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாகவும், பாலியல் தொழில் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவலர்கள் அந்த வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற ஒரு பெண் மற்றும் சேது மூர்த்தி, ராமமூர்த்தி, விஷ்ணு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொழில் நடந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இத்தொழிலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் பத்திரிகையாளர்கள் எனக் கூறி கஞ்சா விற்ற இருவர் கைது!

ABOUT THE AUTHOR

author-img

...view details