தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேஷ். இவர் தனது தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இதில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு இரண்டு பசுமாடுகள் காணாமல் போனதாக காவல் துறையில் புகாரளித்துள்ளார்.
இதையடுத்து, விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி, சிவப்பிரகாசம் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுகுடிக்க பணம் இல்லாத காரணத்தால் பசுமாடுகளை திருடி, ஆண்டிப்பட்டியில் விற்பனை செய்தது தெரியவந்தது.