தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை" - ஓபிஎஸ்ஸை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்! - ஓபிஎஸ்

நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எங்கு சென்றாலும் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என தேனியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 31, 2023, 8:32 PM IST

ஓபிஎஸ்ஸை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

தேனி: மதுரை மாவட்டத்தில் வருகிற 20ஆம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் என கலந்துகொண்டனர்.

அப்போது இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''எம்ஜிஆர் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியது தேனி மாவட்டம். அதனால் தான் இந்த மாவட்டம் வளர்ந்தது. ஆனால், தேனி மாவட்டம் ஓபிஎஸ்ஸை முதலமைச்சர் ஆக்கியதால் கழகம் சந்தித்த சோதனைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

3 முறை தேனி மக்கள் அவரை முதலமைச்சர் ஆகியதால் அவர் அதிமுகவிற்கு தரும் தொல்லை தாங்கமுடியவில்லை. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எங்கு சென்றாலும் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை'' என ஓபிஎஸ்ஸை விமர்சித்தார்.

''இங்கு வந்து இருக்கக்கூடிய கூட்டத்தை பார்த்தால் நாளை தேனியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி நடத்தும் கூட்டம் ரத்து செய்யப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நாளையே தேர்தல் வைத்தாலும் எடப்பாடி தான் முதலமைச்சராக வருவார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று எந்த நேரத்தில் முதலமைச்சர் பதவி ஏற்றாரோ எல்லா விலைவாசியும் உயர்ந்துவிட்டது. மக்கள் வீட்டில் தக்காளி சட்னி கூட வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் அண்ணன் எடப்பாடி" என்று செல்லூர் ராஜு தனது உரையைத் தொடங்கினார். அதில்,''இது தேனி மாவட்டம் இல்லை; புரட்சித்தலைவி அம்மா மாவட்டம் என்று தான் கூற வேண்டும்.

அதிமுகவின் ஒரே எதிரி கருணாநிதி குடும்பம் தான். திமுக மட்டும் தான். ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வணங்க வேண்டிய மாவட்டம் தேனி மாவட்டம்'' என்று கூறிய அவர், ''இந்த இயக்கத்தை அழிக்க யாராலும் முடியாது; அது துரோகியாக இருந்தாலும் சரி எதிரியாக இருந்தாலும் சரி'' என்று கூறினார்.

மேலும், ''ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள இந்த பொன்விழா மாநாடு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொடுக்கப் போகிறது'' என்று கூறினார்.

இதையும் படிங்க:"ஆளுநர் ரவியின் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை"- ஆளுநருக்கு நன்றி சொல்லும் அமைச்சர் தங்கம் தென்னரசு

ABOUT THE AUTHOR

...view details