தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் பரவும் காட்டுத்தீ!

தேனி: சோத்துப்பாறை அணைக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் தற்போது காட்டுத்தீ பற்றி எரிந்துவருகிறது.

Forest fire in theni
Forest fire in theni

By

Published : Feb 11, 2020, 10:19 AM IST

மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத்தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே உள்ளது.

இருப்பினும், தற்போது சோத்துப்பாறை அணைப் பகுதிக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தீ பற்றி எரிந்துவருகிறது. இந்தக் காட்டுத்தீயினால் விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து சாம்பலாகிவருகின்றன.

தேனியில் பரவும் காட்டுத்தீ

காட்டுத்தீயினால் வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

ABOUT THE AUTHOR

...view details