தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்கணியில் மீண்டும் மலையேற்றப் பயிற்சி! - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: குரங்கணி மலைப்பகுதியில் வனத் துறையினரிடம் முறையான அனுமதி பெற்ற பின்னர் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள மாவட்ட வனத் துறை அனுமதியளித்துள்ளது.

kurangani trucking news

By

Published : Sep 5, 2019, 2:16 PM IST

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் 2018ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும பெரும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள மாவட்ட வனத் துறை தடைவிதித்தது.

அதனைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு பிறகு நவம்பர் 30ஆம் தேதி முதல் மீண்டும் மலையேற்றப் பயிற்சிக்கு சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டு, உரிய கட்டணமும் நிர்ணயக்கப்பட்டிருந்தன. கோடை காலம் தொடங்கியதையடுத்து, காட்டுத்தீ அபாயம் கருதி மீண்டும் மலையேற்றப் பயிற்சிக்கு ஜனவரி மாதத்தில் மீண்டும் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பருவநிலை மாற்றமடைந்துள்ளதால் மலையேற்றப் பயிற்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாக மாவட்ட வனத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கணி முதல் டாப் ஸ்டேசன் வரை மலையேற்றத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த முதல் தடை இன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலையேற்றம் மேற்கொள்ளும் நபர்கள், தமிழ்நாடு வனம் மற்றும் வன விலங்குகள் (மலையேற்ற ஒழுங்குபடுத்துதல்) விதிகள் 2018இன்படி தேனி மாவட்ட வன அலுவலகத்தில் முறையான விண்ணப்பம் சமர்ப்பித்து, அனுமதி வழங்கப்பட்ட பின்னரே மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

குரங்கணியில் நிபந்தனைகளுடன் மீண்டும் மலையேற்றப் பயிற்சி

மலையேற்றம் மேற்கொள்ளும் நபர்கள் குரங்கணியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாறாக சென்டரல் ஸ்டேசன் மற்றும் டாப் ஸ்டேசனில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details