தமிழ்நாடு-கேரள எல்லையான குமுளி அருகே உள்ளது தேக்கடி. சுற்றுலாத் தளமான இங்கு தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம் இணைந்து 13ஆவது மலர்கண்காட்சியை கடந்த 4-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.
விடுமுறை எதிரொலி - தேக்கடி மலர்கண்காட்சியில் குவிந்த மக்கள்...!
தேனி: தொடர் விடுமுறை காரணமாக தேக்கடி மலர்கண்காட்சியை பொதுமக்கள் அலை அலையாக வந்து பார்வையிடுகின்றனர்.
இந்த கண்காட்சியில் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டகலைச் செடிகள் என அனைத்தும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வேளாண் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கமும் இந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் உற்சாகமாக மலர் கண்காட்சியைக் காண வருகின்றனர்.
தொடர் விடுமுறை காரணமாக மலர்கண்காட்சியை காண அதிக அளவிலான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.