தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் மாண்டஸ் புயல் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அருவியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
தேனி கும்பக்கரை அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
மேலும் நேற்று (டிச.10)மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். இந்நிலையில் அருவியின் நீர்வரத்து இன்று (டிச.11) சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடைகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தந்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னை மெரினாவில் கரை ஒதுங்கிய மிதவை.. நடந்தது என்ன?