தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை - Flooding at Kumbakarai Falls by Heavy Rain

தேனி: பெரியகுளம் அருகே கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

By

Published : Dec 2, 2019, 3:15 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வருகிறது.

கும்பக்கரை அருவியில் விழுகின்ற தண்ணீரானது குளிர்ச்சியாகவும், மூலிகைத்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதால் தேனி மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவிக்கு செல்லவோ, அருவியல் குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தற்போது சபரிமலை சீசன் என்பதால் அருவிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தொடர் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை!

ABOUT THE AUTHOR

...view details