தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தேனி, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக இன்று (அக்.17) காலை மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் காலை 69.06 அடியை எட்டிய போது அணையில் இருந்து 699 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தேனி மாவட்டத்தில் மாலையில் இருந்து தொடர்ச்சியாக மிக அதிகமான மழை பெய்து வந்த நிலையில் வைகை அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.