தேனி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியான மதுரை சாலை அருகே வாரி வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் பெரும் மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாய்காலில் தடுப்பு சுவர் அமைக்க பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைநீர் தடையின்றி வடிவதற்கு வாய்காலில் தடுப்புசுவர் கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.