தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பக்கரை அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு - The wild flood is raging

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு!
கும்பக்கரை அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு!

By

Published : Oct 17, 2022, 10:57 PM IST

தேனி:பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் கடந்த 11ஆம் தேதி இரவு முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 6 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கும்பக்கரை அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு!

இந்நிலையில் இன்று (அக்.17) பிற்பகல் 3 மணி முதல் கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி வழக்கில் ஜாமீன் நிபந்தனை தளர்வு

ABOUT THE AUTHOR

...view details