தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - Kumbakarai waterfall near Periyakulam

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Etv Bharatகும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Etv Bharatகும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

By

Published : Nov 3, 2022, 2:31 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (நவ-2)இரவு பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனசரகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குளிக்க 14 நாட்களுக்குப் பின் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details