தேனி: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. நேற்று இரவில் இருந்து அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எட்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
இதன் காரணமாக எட்டாவது நாளாக தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு