தேனி:மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த வந்த கனமழை காரணமாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. மேலும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
வைகை அணையின் மொத்த கொள்ளளவான 71 அடியில் 66.1 அடியை எட்டியதைத் தொடர்ந்து அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்ததால் வைகை கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வைகை அணையில் நீர் வரத்து நேற்று முதல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அணைக்கு வரும் நீர்வரத்து 3,211 கன அடியை எட்டிய போது வைகை கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.