தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு

கனமழை காரணமாக வைகை அணை நிரம்பிவரும் நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 12, 2022, 10:31 PM IST

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை அதன் முழு கொள்ளவை எட்டி வருகிறது.

71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் இன்று (நவ.12) காலை 69.55 அடியாகவும் அணைக்கு வரும் நீரின் அளவு 1012 கனஅடியாகவும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1269 கன அடியாக இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக அணையின் கொள்ளளவு 70.01 அடியாக கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1269 கனஅடியிலிருந்து 3780 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு

இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் வைகை ஆற்றை கடக்கவோ, அதில் இறங்கி குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:கொடைக்கானல் வெள்ளி நீர்விழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு!

ABOUT THE AUTHOR

...view details